உடனடியாக வரி விதிப்பை மாற்றுங்கள்.. இல்லையெனில் பொருளாதாரம் ஆபத்தில்.. – மத்திய வங்கி , அரசுக்கு அறிவிப்பு..
வெளிநாட்டுச் சந்தைகளுக்கு இலங்கை அனுப்பும் பொருட்களுக்கும், நம் நாட்டுப் பொருட்களுக்கும் , அந்த நாடுகள் விதித்துள்ள வரி விகிதங்களையும் மறுபரிசீலனை செய்வது அவசியம் என இலங்கை மத்திய வங்கி அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் (2024) இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு எந்த வரி விதித்தாலும் அது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே உடனடியாக அரசு தலையிட வேண்டிய , அபாயகரமான சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக பரஸ்பர வரி விதிப்புகள் (நாடுகளுக்கு இடையே செயல்படும் வரிகள்) குறித்து பரிசீலித்து , வரி கட்டமைப்புகளை மறு ஆய்வு செய்வது அவசியம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் வரி மாற்றங்களால் இலங்கையின் மற்ற வர்த்தக கூட்டாளி நாடுகளுக்கும் ஏற்படக்கூடிய தாக்கங்களால் , இலங்கையின் ஏற்றுமதிக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் மத்திய வங்கி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் வரி கொள்கை மாற்றங்களால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பின்னடைவு காரணமாக , இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் வரும் பண அனுப்பல்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை , மேலும் வலியுறுத்துவது என்னவென்றால், இந்த நிச்சயமற்ற உலகச் சூழல் காரணமாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை தீவிரமாக செயல்படுத்துவதோடு, பொருட்கள் வணிகம் இடம்பெயர்வதற்கான (மாறுவதற்கான) வாய்ப்புகளை இலங்கை சாதகமாக பயன்படுத்துவதற்கான கொள்கை ரீதியான தயார்நிலையை அதிகரிப்பதும் அவசியம் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
