ஜி.எஸ்.பி. பிளஸ் மீளாய்வில் சாதக நிலை!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளாய்வு,
சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவுத் தலைவர் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும்
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இடையிலான
கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில்,
ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளதாகவும்,
வர்த்தக வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும்
சார்ல்ஸ் வைட்லி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க,
அது தொடர்பான 27 சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை முன்னேற்றம் காண்பிக்கிறது என்றும்,
தற்போதைய அரசின் கொள்கைகளும் இந்த அளவுகோல்களுடன் ஒத்துப்போகின்றன என்றும்
அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை
ஏற்றுமதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பின்வந்த ஆட்சிகள் வீண் செலவுகள், மோசடிகள் காரணமாக நாட்டை சரிவில் தள்ளியது என்றும்,
தற்போதைய அரசு மக்கள் ஆதரவுடன் அமைந்துள்ளது என்றும்
வாக்குறுதிகள் அனைத்தும் நேர்மையாக நிறைவேற்றப்படும் எனவும்
ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில், அமைச்சர்கள் அனில் பெர்னாண்டோ, ஹர்ஷன நாணயக்கார, ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.