கைத்தொழில் அபிவிருத்தி சபையினரால் ஆடை வடிவமைப்பு பயிற்சி நெறி.

கைத்தொழில் அபிவிருத்தி சபையினரால் ஆடை வடிவமைப்பு பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவ மாவட்ட செயலக கைத்தொழில் அபிவிருத்தி சபையினரால் தொழில்நுட்பத்திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எட்டு நாட்களை உள்ளடக்கிய ஆடை வடிவமைப்பு தொடர்பான பயிற்சி நெறியானது அக்டோபர் 23ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரையான காலப்பகுதிகளில் உடையார்கட்டு வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆடைவடிவமைப்பு தொடர்பான பயிற்சி நெறியின் வளவாளராக தையல் பயிற்றிவிப்பாளர் ஜெயாநந்தவதனா அவர்கள் கலந்து கொண்டார். முகாமைத்துவம், செலவுக்கணக்கீடு, விற்பனை தொடர்பான பயிற்சி நெறிகளை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மாவட்ட உதவிப்பணிப்பாளர் P.றமணன் அவர்களால் வழங்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்பட்ட இப் பயிற்சி நெறியில் உடையார்கட்டைச் சேர்ந்த பெண்தொழில் முயற்சியாளர்கள் 21பேர் கலந்து கொண்டனர்.

இதே வேளை 06ம்திகதி தொடக்கம் 12ம்திகதி வரையான காலப்பகுதியில் மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரூடாக தோற்பொருள் உற்பத்தி தொடர்பாக 17தொழில்முயற்சியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.