மண்வெட்டியால் தாக்கி மனைவியை படுகொலை செய்த கொடூர கணவன்!

குளியாப்பிட்டி – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் 44 வயதுடைய வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் மேற்படி பெண் மரணித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையாளியான மேற்படி பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.