160 போதை மாத்திரைகளுடன் யாழில் இளைஞர் ஒருவர் கைது.
யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைக் குற்றத் தடுப்புக்குப் பொறுப்பாகவுள்ள பொ.பா.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மானிப்பாய், சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
