மாந்தை கிழக்கு பிரதேச சபையும் தமிழரசு வசம் – தவிசாளராக இராசையா நளினி தெரிவு.

முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது.

இதேநேரம், உப தவிசாளர் பதவியை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கைப்பற்றியுள்ளது.

13 உறுப்பினர்களைக் கொண்ட மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அதிகாரப் பதவிகளுக்கான தெரிவு நேற்று வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

தவிசாளர் பதவிக்கான பகிரங்க வாக்கெடுப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இராசையா நளினி 7 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியும் வாக்களித்தது.

உப தவிசாளராக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சத்தியவரதன் 6 வாக்குகளைப் பெற்று தெரிவானர்.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்பன தலா 2 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.