ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அதிரடியாகக் கைது!
ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க, இலஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி விமான சேவை நிறுவனத்தின் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
