மேர்வின் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிப்பு!

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரும் கம்பஹா மேலதிக நீதவான் டபிள்யூ கே டி விஜேரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணைங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.