பொலிஸ் மறித்தபோது மோ. சைக்கிளுடன் கீழே விழுந்த இளைஞர் பலி! – யாழில் பரிதாபச் சம்பவம்.

யாழ்ப்பாணத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவரை வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்த சமயம், மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 22 வயதான தினுசன் என்னும் இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல உணவகம் ஒன்றில் பணிபுரியும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.