பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டாக நுழைந்த சுசித்ரா..!

பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் குறைவில்லாமல் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 28வது நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியே செல்லும் நிலையில், மற்றொரு போட்டியாளர் உள்ளே நுழைந்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் கமலிடம் பேசும் சுசித்ரா கூறும்போது, ‘ஒவ்வொரு சீசனை விட இந்த தடவை போட்டி ரொம்ப கடுமையாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது என்று கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் சுசித்ரா. சுசித்ராவின் வருகையை சிலர் மகிழ்ச்சியுடன் சிலர் வரவேற்றாலும், சிலரது முகத்தில் இப்போதே அச்சம் ஒட்டிக்கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.