முஸ்லிம்களுடைய உடல்களை தகனம் செய்யாமல் புதைப்பதற்கு முயற்சி? : அப்துல் சத்தார்

வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் முஸ்லிம்களுடைய உடல்களை தகனம் செய்யாமல் புதைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் சமய விவகாரத்திற்கான இணைப்புச் செயலாளரும் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் பிரதமரின் இணைப்பதிகாரியுமான அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த உடல்களைத் தகனம் செய்வது தொடர்பில் குறித்த வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் முஸ்லிம்களுகடைய உடலை தகனம் செய்யாமல் புதைப்பதற்கான முயற்சிகளை  முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் சமய விவகாரத்திற்கான இணைப்புச் செயலாளரும் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் பிரதமரின் இணைப்பதிகாரியுமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இலங்கையில் சுகாதார அதிகாரிகள்  எடுத்த தீர்மானத்திற்கு இணங்கவே அரசாங்கம் முழு நாட்டினுடைய மக்களுடைய பாதுகாப்பை கருத்திற் கொண்டு  உடல் தகனம் செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு அமைய தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களுடைய  தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும்  முஸ்லிம்கள் இந்த  உடல் தகனம் செய்யும் விடயத்தில் அதிருப்தியை கொண்டுள்ளனர்.  இது தொடர்பில் முஸ்லிம் சமூக அமைப்புக்கள் என்னிடம் முறைப்பாடுகளை முன் வைத்திருந்தார்கள்.

இந்த விடயம் தொடர்பில்  நான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கருத்தினைப் பகிர்ந்து கொண்ட போது அவர் குறித்த வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க   முஸ்லிம்களுகடைய உடல்களை தகனம் செய்யாமல் புதைப்பதற்கான முயற்சிகளை  முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அதே போன்று அமைச்சர் அலி சப்ரி அவர்கள் அமைச்சரவைக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் சிறந்த முடிவுவினைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரப் பத்திரத்திரம் ஒன்றை இன்று அல்லது நாளை  சமர்ப்பிக்கவுள்ளார்.

அதேவேளையில் அமைச்சரும் பாராளுமன்றக் கொரோடாவுனமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களிடம் இது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பிக்கவுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு ஆளும் தரப்பு அமைச்சர்களுடைய ஆதரவைப் பெற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

– இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.