யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய ஒடியல் கூழ் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

ஒடியல் மாவு – 1 கப் (பணங்கிழங்கு மாவு)
நண்டு – 250 கிராம் (சின்ன துண்டுகளாக உடைத்தது)
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்து துண்டுகளாக்கப்பட்டது)
மீன் – 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
நீண்ட பீன்ஸ் – 100 கிராம் (1 இன்ச் துண்டுகளாக நறுக்கியது)
பலாக்கொட்டை – 1/2 கப் (மேல் தோல் நீக்கி, வேகவைத்தது)
மரவள்ளிக்கிழங்கு – சிறிய துண்டுகளாக நறுக்கியது
முருங்கை கீரை – ஒரு கைப்பிடி
மாங்காய் – 1 (நறுக்கியது)
வாழைக்காய் – 1 (நறுக்கியது)
புளி – எலுமிச்சை அளவு (கரைத்து வடிகட்டியது)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

சரக்கு(அரைக்க வேண்டியது )

சீரகம்
பூண்டு
செத்தல் மிளகாய் (வரமிளகாய்)
மிளகு

செய்முறை

ஓடியல் மாவை 4–5 கப் தண்ணீரில் நன்கு கரைத்து, கட்டியின்றி அரைத்துவிட்டு 1-2 மணி நேரம் ஊற விடவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, மீன், இறால், நண்டு, மரவள்ளிக்கிழங்கு, பலாக்கொட்டை, நீண்ட பீன்ஸ், மாங்காய், வாழைக்காய் சேர்த்து நன்றாக வேக விடவும்.

மசாலா (சீரகம், பூண்டு, செத்தல் மிளகாய், மிளகு) அரைத்துக் கொள்ளவும்.

கடல் உணவுகள், காய்கறிகள் வெந்ததும், அரைத்த மசாலா மற்றும் புளிக்கரைசல் சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

மெதுவாக ஒடியல் மாவு கரைந்ததை ஊற்றவும். தொடர்ந்தும் கிளறிக்கொண்டே இருக்கவும் (கட்டி ஏற்படாமல்).

கூழ் கெட்டியாகும் வரை கிளறவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.

கடைசியாக , முருங்கை கீரையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

காரம் அதிகமாக இருந்தால் தான் சுவை சிறப்பாக இருக்கும் – மிளகாய் அளவு சரிசெய்க.

பலாக்கொட்டை நன்கு வெந்திருக்க வேண்டும்.

ஒடியல் மாவு இல்லையெனில், பச்சரிசி மாவு வறுத்து மாற்றாக பயன்படுத்தலாம் – ஆனால் இயல்பான சுவை ஒடியலில்தான் இருக்கும்

Leave A Reply

Your email address will not be published.