யாழில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

யாழ். மண்கும்பான் கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

சடலம் ஒன்று மேற்படி கடற்பகுதியில் மிதப்பதாகக் கிராம மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதன் அடிப்படையில் ஊர்காவற்துறைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டனர்.

ஊர்காவற்துறைப் பொலிஸாரின் விசாரணைகளின் பின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.