இன்று அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: பிடன் வெற்றி பெறுவார் என எதிர்வு கூறப்படுகிறது

 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெற்று தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது.

சமீபத்திய சி.என்.என் கணிப்புகளின்படி, பைடன் ”Battleground Ground States’ என்று அழைக்கப்படும் பகுதிகளில் பைடன் மிகவும் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிடன் , மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் ஒரு தெளிவான வெற்றியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அரிசோனா மற்றும் வட கரோலினா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

அரிசோனா மற்றும் வட கரோலினாவில் 2016 ல் அதிபர் டிரம்ப் தெளிவான வெற்றியைப் பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் வெற்றி கடினமாக இருக்கும் என்று சி.என்.என் தெரிவித்துள்ளது.

இந்த மாநிலங்களில், பிடென் 50% வாக்குகளையும், டிரம்ப் 46% வாக்குகளையும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில மணிநேரங்களுக்கு முன்னர், பிடென் பென்சில்வேனியாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார், “ஒரு புதிய நாளின் தொடக்கத்தை” நினைவு கூர்ந்தார்.

இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் முடிவிற்கு முன்னர், ” ‘It’s a little tough out here” – “இங்கே நிலைமை கொஞ்சம் கடினமானது” என்று தெரிவித்தார்.

91 மில்லியன் அமெரிக்கர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்!


 91 மில்லியன் அமெரிக்கர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத ‘ஆரம்ப வாக்களிப்பு’ வாக்குகள் இதுவாகும்.

வெளிநாட்டு தகவல்களின்படி, ஏற்கனவே வாக்களித்தவர்களிடையே பிடனின் வெற்றி வாய்ப்புகளே தெரியவுள்ளதாக உள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன.

கோவிட் -19 தொற்றுநோய் 9.3 மில்லியன் அமெரிக்கர்களைப் பாதித்து இறப்பு எண்ணிக்கையை 231,000 ஆக உயர்த்திய நேரத்தில் இந்த ஜனாதிபதித் தேர்தல் வந்துள்ளது.

– அமாளி ஜயவீர

Leave A Reply

Your email address will not be published.