விஜய் மீது வழக்குப்பதிவு! மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தாக்கியதாக புகார்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிற கட்சிகளை போலவே விஜயும் தனது கட்சியை வலுப்படுத்துகிறார்.
இதற்காக சில தினங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் ரேம்ப் வாக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த மாநாட்டில் தன்னை பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் சரத் குமார்.
அதன்படி, 189(2), 296(B), 115(1) ஆகிய பிரிவுகளின் கீழ் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது குன்னம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
