சுற்றுலா விடுதி அறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன், கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் அறையில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரியான்சி பிள்ளை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுற்றுலா இடங்களைகக் கண்டு களிக்க வந்துள்ளார். இதன்போது, நேற்று மதியம் தனது நண்பருடன் குறித்த சுற்றுலா விடுதியில் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு விடுதியில் கீழே வீழ்ந்து கிடந்துள்ளார்.

பின்னர், கீழே விழுந்த நபரை மீண்டும் அறைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். எனினும், இன்று காலை மேற்படி நபர் வெளியில் வரவில்லை என்பதால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ள பத்தனைப் பொலிஸாருக்கு அறிவித்தனர். பின்னர் பொலிஸார் மேற்படி விடுதிக்கு வந்து அந்த நபர் அறைக்குள் உயிரிழந்து கிடந்தமையைக் கண்டனர்.

உயிரிழந்தவரின் உடல் தொடர்பான நீதிவான் விசாரணை நடைபெற்றது.

சடலம் ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அதனையடுத்துப் பொலிஸார் சடலத்தை டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.