வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவேந்தல்.

தியாகி திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வவுனியா மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.

இதன்போது திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவிக்கபட்டு, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், மாநகர சபை உறுப்பினர் தர்மரத்தினம், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்தப் பகுதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 25ஆம் திகதி காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.