தலைமைக்கு தகுதியற்றவர் சம்பந்தன் : பரவும் காட்டமான விமர்சனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அப்பதவிக்கான தகுதியற்றவர் என்ற விமர்சனம் தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. இதன் ஒரு வெளிப்பாடாக பிரபல தமிழ் இலக்கிய, ஆன்மீக பேச்சாளரும் அகில இலங்கை கம்பன் கழக காப்பாளருமான கம்பவாரிதி இ .ஜெயராஜின் ஒரு காட்டமான உரை சமூக வலைத்தங்களில் அண்மைக்காலமாக அதிகம் உலா வருகிறது .

அந்த உரையில் சம்பந்தன் அவர்களின் செயல் திறனற்ற தலைமையினால் தான் தமிழ் மக்கள் மூன்று பிரதான அணிகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாதவர் தலைமை பதவிக்கு தகுதியற்றவர். இதைப் புரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவை எனக்கூறிய அவர் தமிழ் மக்களின் ஏகபிரதி நிதிகள் என தன்னை கூறிக்கொள்ளும் அந்த கட்சியில் இன்று ஒரு இளைஞர் தன்னை இணைத்து கொண்டால் அவருடைய அரசியல் எதிர்காலம் பற்றிய எந்த வேலைத்திட்டமும் அந்த கட்சியில் இல்லை.தொண்டர்களின் உழைப்பில் தங்களை வளர்த்துக்கொள்வதிலேயே இவர்கள் குறியாக இருக்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பினரை திரு .ஜெயராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வீடியோ நன்றி : கெப்பிட்டல்

Comments are closed.