லொறி மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் சாவு!
கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, எதிர்த் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில் நேற்று புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான பொலிஸ் கான்ஸ்டபிள் பலத்த காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வரக்காபொல, மஹேனகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.
சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
லொறியின் சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
