கொழும்பில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதி குடும்பஸ்தர் மரணம்!
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
