வைக்கோலுக்குத் தீ வைக்கச் சென்ற குடும்பஸ்தர் தீயில் கருகி உயிரிழப்பு!

குடும்பஸ்தர் ஒருவர் தனது வயலில் வைக்கோலுக்குத் தீ வைக்கச் சென்ற போது தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை – ஹிங்குரக்கொட, வராஹேன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஹிங்குரக்கொட, போகஸ் சந்தியில் வசித்த இரண்டு பிள்ளைகனின் தந்தை ஆவார்.

இவர் வைக்கோலுக்குத் தீ வைப்பதற்காக தனது வயலுக்கு நேற்று சென்றுள்ளார். பின்னர் இவர் வைக்கோலுக்குத் தீ வைத்த போது அந்தப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டு அந்த இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பொலனறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குரக்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.