முதலை இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு!
முதலை இழுத்துச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 18 ஆம் திகதி இரவு அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது முதலை இழுத்துச் சென்றுள்ள நிலையில் இரண்டு நாட்கள் கழித்து நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தப் பகுதியில் முதலைகள் இழுத்துச் செல்லப்பட்டு மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கலமெட்டிய கடற்கரை பகுதியில் விட்டுச் செல்கின்றனர் என்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
