‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைத் திட்டம்: 9 முக்கிய குற்றவாளிகள் அடையாளம்!

பாதாள உலகக் குழுவின் முக்கியஸ்தர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சதித்திட்டத்தின் பின்னணியில் ஒன்பது முக்கிய குற்றவாளிகள் இருப்பது விசாரணைகளில் உறுதியாகியுள்ளது என்று கொழும்பு குற்றப் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மேலும் ஒரு “பி ”அறிக்கையைச் சமர்ப்பித்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணையில், விளக்கமறியலில் இருந்த 5 சந்தேகநபர்கள் பூஸா சிறைச்சாலையிலிருந்து ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பதினைந்தாவது சந்தேகநபரான இஷார செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் 3 ஆண் சந்தேகநபர்கள், 2 பெண் சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக 9 முக்கிய சந்தேகநபர்களும் 28 முதல் 36 வரையிலான சந்தேகநபர்களாகப் பெயரிடப்படுவார்கள் என்று கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.

முக்கிய ஒன்பது சந்தேகநபர்களில் நான்கு பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கொழும்பு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.

மேலும், பெயரிடப்பட்ட மற்ற நான்கு சந்தேகநபர்களையும் காவலில் எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாகப் பெயரிடப்பட்ட 35 ஆவது சந்தேகநபர் பேலியகொடாடை குற்றப் புலனாய்வுப் பிரிவில் நடத்தப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மற்ற சந்தேகநபர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திலும், புதுக்கடை எண் 8 நீதிவான் நீதிமன்றத்திலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் குறித்து தனி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு தலைமை நீதிவான், வழக்கின் முன்னேற்றத்தை இம் மாதம் 21ஆம் திகதி அறிவிக்குமாறு உத்தரவிட்டு, சந்தேகநபர்களை மேலும் விளக்கமறியலில் வைத்து வழக்கை ஒத்திவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.