கிழக்கில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொடூரக் கொலை!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலன்னுகே 12 ஆவது தூண் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டுப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 55 வயதுடைய பொத்துவில் – ஹுலன்னுகே பகுதியைச் சேர்ந்த பெண் என்று தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 59 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் ஹுலன்னுகே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.