கல்முனைப் பிரதேசத்தில் வீதியைத் தாண்டிய கடல் – படகுகள் வெளியேற்றம்; மக்கள் அச்சத்தில்…

கல்முனைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியைத் தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது.

மீனவர்கள் தமது படகுகளை அவசர அவசரமாகப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

கல்முனையின் கரையோர கடல் பகுதிகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

குறிப்பாக பெரியநீலாவணை, மருதமுனை, கல்முனை போன்ற கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது.

கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை பரவுவதோடு கடல் அரிப்பும் பாரியளவில் இடம்பெறுகின்றது.

மீனவர்களது. மீன்பிடிப் படகுகள் யாவும் வீதிக்கு இழுக்கப்படுகின்றன. கடல் பகுதிகளை பார்வையிடச் செல்லும் மக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு பெரியநீலாவணை பொலிஸார், மக்களை அறிவுறுத்துவதைக் காணக்கூடியதாக இருந்தது.

இன்று கல்முனையில் மழை சற்று குறைந்திருந்தாலும் காற்றின் வேகம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. வெள்ள நிலையும் தொடர்கின்றது. மக்களது இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.