தைத்திருநாளில் மண்பானையின் மகத்துவம்.
தமிழர்களின் பாரம்பரிய தைத்திருநாளில் மண்பானைப் பொங்கல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இம்முறை அதிக மக்கள் மண்பானையின் மகத்துவத்தை உணர்ந்து அதனைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் நீண்டகாலமாக மட்பாண்ட தொழிலில் ஈடுபடும் தம்பதியினரின் கடையிலும், தொழிற்சாலையிலும் அதிகளவு வர்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகளை மக்கள் கொள்வனவு செய்கின்றமையை அவதானிக்க முடிந்தது.




















