கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி வயோதிபர் சாவு!

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் சைக்கிளில் வந்த வயோதிபர் ஒருவர் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயிலுடன் மோதுண்டு மேற்படி வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆனந்தபுரத்தைச் சேர்ந்த 82 வயதுடைய சபாபதி என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.