யாழில் இன்று இராணுவ வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
யாழ்ப்பாண நகரைப் அண்மித்த மடத்தடிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
