மத்துகம பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மாயம்: பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது!

மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி முதல், குறித்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல்போயுள்ளன என்று ஆவண சோதனையின் போது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.