தீபாவளிப் பண்டிகையை வீட்டில் கொண்டாடுங்கள் : வடக்கு சுகாதார திணைக்களம் வேண்டுகோள்

தீபாவளிப் பண்டிகையை
வீட்டில் கொண்டாடுங்கள்

– வடக்கு சுகாதார திணைக்களம் வேண்டுகோள்

“எதிர்வரும் 14ஆம் திகதி தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (10) அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்வரும் 14ஆம் திகதி இந்து மக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது.

கொரோனாத் தொற்று நோயினால் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தீபாவளிப் பண்டிகைக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும்போது இந்த நோய் வட பகுதியிலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே, இந்த முறை தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.