மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு! – முதியவர் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் காலி, கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றைய மோட்டார் சைக்கிளின் செலுத்துநரான 67 வயதுடைய முதியவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.