கோஹ்லி தலைமையில் 25 வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்கள் குழு ஆஸ்திரேலியாவில், 14 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியா சிட்னி புல்மான் ஓட்டலில் ஆஸ்திரேலிய ரக்பி ‘ஜாம்பவான்’ பிராட் பிட்டர் அறை, கோஹ்லிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் (நவ. 27, 29, டிச. 2), மூன்று ‘டுவென்டி-20’ (டிச. 4, 6, 8) மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 69 நாட்கள் கொண்ட இத்தொடருக்காக கோஹ்லி தலைமையில் 25 வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்கள் குழு ஆஸ்திரேலியா சென்றது. இங்கு சிட்னி ஒலிம்பிக் பார்க் ஓட்டலில், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

வழக்கமாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் புளூஸ் ரக்பி அணி வீரர்கள் இங்கு தான் தங்குவர். இந்திய அணி வருகை காரணமாக இவர்களை வேறு ஓட்டலுக்கு செல்லுமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு, மிகவும் ஆடம்பரமான வசதிகள் கொண்ட ‘ஸ்பெஷல்’ அறையை ஒதுக்கினர். ஆஸ்திரேலிய ரக்பி ‘ஜாம்பவான்’ வீரர் பிராட் பிட்லர், வழக்கமாக இந்த அறையில் தான் தங்குவாராம். தற்போது இது, கோஹ்லிக்கு தரப்பட்டதாக, ‘டெய்லி டெலிகிராப்’ என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

இங்கு தான் அடுத்த இரு வாரத்துக்கு இந்திய வீரர்களும் தங்க உள்ளனர். இந்திய வீரர்களுடன் குடும்பத்தினரும் வர அனுமதி தரப்பட்ட நிலையில், அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்று பயிற்சியில் ஈடுபட காத்திருக்கின்றனர். சிட்னியில் உள்ள ‘பிளாக்டவுன்’ சர்வதேச ஸ்போர்ட்ஸ் பார்க்கில் உயர் பாதுகாப்பு வளையத்தில் பயிற்சியை துவங்க இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் உட்பட அனைவரும் நவ. 22ம் திகதி தனியாக பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில்,”எனது வாழ்க்கையில் நான் பார்த்த வரையில் கோஹ்லி தான் உலகின் ‘பெஸ்ட்’ வீரர். இவரது துடுப்பாட்டம் மட்டுமன்றி, களத்தில் துடிப்பாக செயல்படுவது, தீவிர விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வது என இதற்கு பல காரணங்கள் உள்ளன. குழந்தை பிறப்புக்காக நாடு திரும்புவது என அவர் எடுத்துள்ள முடிவு, கூடுதல் மரியாதையை தந்துள்ளது,” என்றார்.

ஆஸ்திரேலிய ‘சுழல்’ வீரர் நாதன் லியோன் கூறுகையில், ”இந்திய அணி கப்டன் கோஹ்லி, தொடரின் பாதியிலேயே நாடு திரும்ப இருப்பது ஏமாற்றம். பொதுவாக அனைவரும் உலகின் தலைசிறந்த வீரருக்கு எதிராக விளையாட விரும்புவர். ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் போல உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இவரை கருதுகிறேன். கோஹ்லி இல்லையென்றால் மட்டும் நாங்கள் எளிதாக தொடரை கைப்பற்றிவிட முடியாது. புஜாரா, ரகானே போன்ற அனுபவ வீரர்களுடன், திறமையான இளம் வீரர்கள் இருப்பதால் இந்திய அணி பலமாகவே காணப்படுகிறது,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.