லொறி – ஓட்டோ மோதியதில் 7 வயது சிறுவன் பரிதாப மரணம்!

தனமல்வில – வெல்லவாய வீதியில், குடாஓய நகருக்கு அருகில் நேற்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வெல்லவாயவிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, எதிர்த் திசையில் வந்த ஓட்டோ மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது ஓட்டோவின் பின் இருக்கையில் பயணித்த சிறுவன் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்த சிறுவன் உடனடியாக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக லொறியின் சாரதி குடாஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை குடாஓய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.