சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் – பாகம் 2

சினிமாவுக்கு பின்னால்…
_ பெ.கணேஷ் _

திரைக்கதை எழுதுவது எப்படி?

மிக அழகாக கதை எழுதுபவர்கள் கூட திரைக்கதை என்று வருகிற போது அதை எப்படி ஆரம்பிப்பது அதற்கான வழிமுறைகள் என்ன என்று புரியாமல் இருப்பார்கள்.

சென்ற வாரம் நலன் சொன்னது போன்று ஒரு கதையை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்வது கூட திரைக்கதை வடிப்பதில் ஒரு யுக்தியாகும்.

தமிழ்: கதையை விரிவுப் படுத்துவதற்கு பெயர்தான் திரைக்கதையா?

கதையை விரிவுபடுத்துவதற்கு பெயர் திரைக்கதை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் ஒரு கதையை விரிவுபடுத்துவதால் அது திரைக்கதையாகி விடாது. திரைக்கதை என்பது கதையோடு இணைந்த ஒரு சம்பவங்களில் கோர்வை என்று சொல்வதே மிகச் சரி.

தமிழ் உங்களுக்கு விளக்கும்படியாகவே சொல்கிறேன். காதல் கோட்டை என்கிற படத்தை எடுத்துக் கொண்டால் பார்க்காமலே இருவர் காதலித்து.. முடிவில் இணைகிறார்கள் இதுதான் கதை. ஆனால் அந்த இரு வரிகளுக்கு மிக அழகாக சம்பவங்களை பொருத்தமாக வடித்ததால்தான் இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் என்கிற விருது இயக்குனர் அவத்தியனுக்கு கிடைத்தது.

அதாவது பார்க்காமலே இருவர் காதலிக்கிறார்கள் என்கிற விஷயத்தை அவர் செல்ல ஆரம்பிக்கும் சம்பவம் மிக யதார்த்தமாக துவங்கும். இரயிலில் சர்டிபிகேட்டை தொலைப்பது அதன் மூலம் கடித நட்பு. நட்பு காதலாக மாறுவது அந்த பெண்ணின் அக்காவின் கணவரின் கண்டிப்பு. முடிவில் அந்த கேரக்டரையும் நல்லவராக மாற்றுவது.

இடையில் கதாநாயகனை நெய்யப்பட்டிருக்கு அனுப்புவது அங்கிருந்து ஃபோன் பேச முயலும் போது தடங்கல் இருவரும் சென்னையில் சந்தித்தபோதும் உணர்ந்து கொள்ள முடியாதது. அடைமழையில் ஒரே ஆட்டோவில் இருந்தும் தாங்கள் யார் என்று அறிந்து கொள்ள முடியாது என்று மனித உணர்வுகளை தட்டி எழுப்பும் படியான சம்பவங்களின் சோர்வை அந்த படத்தில் இருந்துதான் அப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாகிறது.

திரைக்கதை என்று இப்படித்தான் கதையை நகர்த்தி செல்லும் சம்பவங்களிலே கோர்வையாக இருக்கவேண்டும்.

தமிழ் : சம்பவங்களின் கோர்வை சரி.. அதற்கான வழிமுறை எப்படி இருக்க வேண்டும்?

இதற்கு பெரிதாக வழிமுறை எதுவும் இல்லை. நீங்கள் மனதில் நினைத்திருக்கும் கதையை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொண்டவுடன் கதையை நகர்த்தும் சம்பவங்களின் அடிப்படையில் எழுபதிலிருந்து என்பது சீன்களை உருவாக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு பகுதிக்கும் இருபது சீன்கள் இருக்கலாம். இந்த இருபது சீன்களிலேயே கதையோடு ஒட்டிய பாடலும்_சண்டைக் காட்சியும் அமைக்க வேண்டும்.

அதாவது நீங்கள் சம்பவங்களை யோசித்த பிறகு அதை ஒவ்வொரு சீன்களாக பிரித்து எழுத வேண்டும்

உதாரணத்திற்கு

சீன் : 1

இடம் : மார்க்கெட்
காலம் : பணிக்காலம் _ அதிகாலை.
பாத்திரங்கள் : ராஜா (ஹீரோ), மின்மினி (ஹீரோயின்), காய்கறிகடைக்காரர்
வயதான மீசைக்காரர், துணை நடிகர்கள்.

என்று சீன் என்னையும் காலம், இடம் மற்றும் பாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்டுவிட்டு சம்பவத்தை எழுத வேண்டும். அதாவது அதிகாலையில் காய்கறிகடைக்குள் நுழையும் ராஜா காய்கறிகளை விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கும் போது எதிரே தலைமறவாக விலைக்கேட்டு எதிர் கடைக்காரரை கலாய்த்துக் கொண்டிருக்கும் மின்மினியை பார்க்கிறாள். அப்பொழுது மின்மினி ராஜாவை ஒரு நொடி கவனித்துவிட்டு மீண்டும் கடைக்காரரிடம் கலாய்க்கிறாள்.

ராஜா அவளின் சமார்த்திய பேச்சை ரசித்தபடி அவளையே பார்க்க.. பேச்சின் இடையே ராஜாவை கவனித்த மின்மினி.. “யோவ் சின்னாலுக் விடறே… மார்க்கட்டுக்கு வந்தமாம் காய்கறியை வாங்கினமாம்னு போய்கிட்டே இரு.. இங்க வந்து லுக் விடறது.. ரொமான்ஸ் பண்றது இதெல்லாம் வச்சிக்காதே அப்புறம் டங்குவாளு அறுந்திடும்” என்று சொல்ல ராஜா திடுக்கிட்டு தலைகுனிகிறாள். ஆனால் உண்மையில் மின்மினி திட்டியது ராஜாவை அல்ல ராஜாவிற்கு பின்புறமாக இருக்கும் வயதான ஒரு கடாமீசை ஆசாமியை என்று உணர்த்தப்படுகிறது.

இது தான் அந்த காட்சியின் சம்பவம் என்று வைத்துக்கொள்வோம் இந்த காட்சியின் சம்பவத்தை நீங்கள் இப்படி தெளிவாக எழுதியவுடன் கடைசி வரியான கடாமீசை ஆசாமியைத்தான் ஹீரோயின் திட்டினாள் என்பதை உணர்த்த ஹீரோயினுக்கும் வயதான ஆசாமிக்கும் இரண்டு குளோசம் ஷாட்களை வைத்து விளக்கி விட வேண்டும் என்பதையும் குறித்து விட வேண்டும்.

அடுத்து சீன்: எண்:2 என்று புதிய சம்பவத்தோடு மீண்டும் அந்த ஹீரோவும், ஹீரோயினும் சந்திக்கும் காட்சியோ அல்லது நீங்கள் ஹீரோயின் குடும்ப சூழலை விளக்க நினைக்கும் காட்சியையோ தொடர வேண்டும். இப்படி நீங்கள் எழுபதிலிருந்து எண்பது சீன்களை சம்பவங்களை யோசித்தவுடன் முதலில் One Line Order என்கிற சம்பவ சுறுக்கத்தை எழுதிக்கொள்ள வேண்டும்.

சீன்: 2
இடம்: ராஜா வீடு
காலம்: பகல்
நடிகர்கள் : ராஜா, சிவகாமி, பாட்டி.

ராஜாவின் பாட்டி ராஜாவிடம் அவன் அம்மா சிவகாமி அவனை சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளும்படி வருந்துவதாக சொல்ல, ராஜா அவன் அம்மாவை கண்வீனியன்ஸ் செய்தல்.

சீன்:3
இடம்: மின்மினிவீடு.
காலம்: பகல்.
நடிகர்கள்: மின்மின் _ தாத்தா _ சுலோச்சனா

மின்மினி மிகவும் துடிப்பான பெண்ணாக இருப்பது பயமாக இருப்பதாக மின்மிணியின் அம்மா சுலோச்சனா சொல்ல அவள் தாத்தா என் பேத்தி இப்படித்தான் இருக்கணும் என்று மின்மினிக்கு தைரியம் சொல்லுதல்.

இப்படி சம்பவத்தை மிகச் சிறிதாக குறித்துக் கொண்டால் அடுத்து அடுத்த சம்பவத்தை மாற்றவோ அல்லது அந்த சம்பவத்தை மேலும் சுவாரஸ்யமாக உருவாக்கவோ வசதியாக இருக்கும்.

இதுபோல் கிளைமாக்ஸ் வரை One line order ஐ முடித்த பிறகு விரிவான சம்பவங்களை எழுத துவங்க வேண்டும்.

ஒரு சிலர் முதலில் விரிவான சம்பவத்தை எழுதி முடித்து பிறகு அதிலிருந்து One line order ஆக சுறுக்கி எழுதுவார்கள் அப்படியும் கூட எழுதலாம். ஏனெனில் ஷீட்டிங் புறப்படுவதற்கு தயாராகும் பிரேக்டவுன், ஷெட்யூல் ஆர்டர், ஆர்டிஸ்ட் காம்பினேஷன் ஆட்ரரை தயாரிக்க இந்த One line order மிகவும் உதவியாக இருக்கும்.

தமிழ் : பிரேக் டவுனா அப்படின்னா என்ன?

ஒரு முழு திரைப்படத்தின் ஒட்டு மொத்த காட்சிகளுக்கும் தேவையான பொருட்கள், நடிகர்கள், உடைகள், போன்றவற்றை கண்டறிவதற்கும், நடிகர்களின் கால்ஷீட் தேதிகளை நிர்ணயிப்பதற்கு உதவியாக இருப்பது தான் பிரேக் டவுன்.

உதாரணத்திற்கு இப்போது சொல்லப்பட்ட மூன்று காட்சிகளை வைத்த ஒரு பிரேக் டவுனை பார்ப்போம்.

சீன் இடம் காலம் சம்பவம் நடிகர்கள் உடைகள் ஸ்பெஷல்
பிராபர்ட்டீஸ் தகவல் குறிப்பு
1 மார்க்கெட் அதிகாலை காய்கறி கடையில் ராஜாவும் மின்மினியும் முதல் சந்திப்பு ராஜா மின்மினி காய்கறி கடைக்காரர் வயதான மீசைக்காரர் துணை நடிகர்கள் சட்டை லுங்கி பாவாடை தாவணி லுங்கி, பனியன் வேட்டி, சட்டை காய்கறிகள் பிளாஸ்டிக்கூடை துணிப்பை தராசு
2 ராஜா வீடு பகல் ராஜா கல்யாணம் குறித்து அம்மா வருத்தம் ராஜா ஆறுதல் சொல்லுதல் ராஜா பாட்டி அம்மா (சிவகாமி) சட்டை ஃபேண்ட் புடவை புடவை காபி டம்ளர்கள்
3 மின்மினி வீடு பகல் மின்மினியின் துணிச்சல் குறித்து அம்மா கவலை தாத்தா உற்சாகப்படுத்துதல். மின்மினி அம்மா (சுலோச்சனா) தாத்தா பாவாடை தாவணி புடவை ஜிப்பா வேட்டி காய்கறி கூடை கத்தி காய்கறிகள்

மேலே நீங்கள் பார்ப்பதுதான் பிரேக்டவுன் இதில் உங்கள் காட்சியின் சம்பவங்களில் தேவைப்படும் பொருட்களை ஸ்பெஷல் ப்ராப்பர்டி காலத்தில் குறித்துக்கொள்ள வேண்டும்.

இப்படி என்பது சீண்டலுக்கான அட்டவணையை தயார்படுத்திவிட்டால் ஷீட்டிங் நடக்கும்போது நாம் எடுக்க வேண்டிய காட்சிக்கு தேவையான பொருள்களை இதன் மூலம் எளிதில் அடையாளம் கண்டு விடலாம். அதன்படி முன்நாளே அப்பொருள்களை தயார்படுத்த முனைந்து விடலாம்.

அதேபோல் ஷெட்யூல்க்களின் லோக்கேஷன்களை பிரிப்பதற்கும் எந்தஎந்த காட்சிகளில் யார், யார் நடிக்கிறார்கள் எத்தனை காட்சிகளில் சேர்ந்து நடிக்கிறார்கள். எந்த இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அதன்படி கால்ஷீட்டுக்கான நாங்களை உருவாக்க முடியும்.

தமிழ் : கால்ஷீட் தேதி நடிகர்களிடம் துள்ளியமாக கணித்து வாங்குவதற்கு சுலபமான வழிமுறை இருக்கா..?

இருக்கு. அதுவும் ஒரு அட்டவணை முறை தான். இதை பொதுவாக திரைப்படக்கல்லூரியில் பயின்ற இயக்குனர்கள் பயன்படுத்துகிறார்கள் அதாவது கீழே உள்ள அட்டவணையை கவனியுங்கள்.

சீன் ராஜா மின்மினி ராஜா அப்பா மின்மினி
அப்பா மின்மினி அம்மா மின்மினி தாத்தா வில்லன் ராஜா தங்கை காய்கறி கடைக்காரன் துணை நடிகர்கள் ……………….

படத்தில் நடிக்கும் முக்கியமான நடிர்களை கொண்டு இப்படி அட்டவணை தயாரிக்க வேண்டும் இதன் மூலம் எந்த சீனில் யார், யார் நடிக்கிறார்கள் என்பதை ஸ்டார் அடையாளத்தை வைத்து எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும் அதன்படி எங்கே எந்தெந்த காட்சிகளில் எந்த எந்த நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள் என்பதை பொறுத்து கால்ஷீட் தேதியை கணித்து வாங்கிவிடலாம்.

என்ன.. ஓரளவுக்கு சூட்டிங் கிளம்புவதற்கு தயாராகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்தவாரம் ஒரு சீனை எப்படி பல ஷாட்களாக பிரிப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

அதுவரை ……………………

Comments are closed.