குருநாகல் மாவட்டத்தில் பறகஹதெனிய தேசிய பாடசாலை மாணவி 197 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

வெளியாகியுள்ள ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் குருநாகல் மாவட்டத்தில்  பறகஹதெனிய தேசிய பாடசாலையின் மாணவி  197 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில்  பறகஹதெனிய தேசிய பாடசாலையின் மாணவியான  எம். எச். எம். ஹாஜரா  என்ற மாணவியே  197 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குறித்து பாடசாலை பிரதி அதிபர் எம். ஏ.  எம். ரிபாஸ் கருத்து தெரிவிக்கையில்
இதுவரையிலும்  வரலாற்றில் பெற்றுக் கொள்ளாத  பெறுபேற்றைப் பெற்றுத் தந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவிக்கு நாம்  பாடசாலை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்;. இப்புள்ளிகளைப் பெற்றுத் தருவதற்கு அயராது பாடுபட்ட ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவி, வகுப்பாசிரியைகள் மற்றும் ஏனைய  பாட ஆசிரியை அனைவருக்கும்  பாடசாலை சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வகுப்பாசிரியை  ருமைசா  கருத்து தெரிவிக்கையில்
கடந்த மூன்று வருடங்களாக இம்மாணவிக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். கற்றல் துறையில் மட்டுமல்லாது ஏனைய விடயங்களிலும் சிறந்த ஆற்றல்களைக் கொண்ட ஒரு மாணவியாகக் காணப்பட்டார்.  மாணவ மாணவிகளுடன் சேர்ந்து சுகுமாக நன்கு பழகக் கூடிய தன்மையுடையவர். விளையாட்டு, ஒழுக்கம் போன்ற எல்லா விடயங்களிலும் நல்ல திறன்களைக் கொண்டவர்.
கொரோனாக் காலங்களிலும் ஒன் லைன் மூலம் சூம் வகுப்புக்களை நடத்தி கற்பித்தலை மேற்கொண்டோம். எங்களுடைய உழைப்புக்கு சிறந்ததொரு வெற்றியை இம்மாணவி பெற்றுத் தந்துள்ளார்.

மாணவி  எம். எச். எம் ஹாஜரா  கருத்து தெரிவிக்கையில்
இத்தகைய பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ள உதவி புரிந்த இறைவனுக்கு முதன் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடைய கற்பித்தலுக்காகப் பாடுபட்ட எனது வகுப்பாசிரியை ருமைசா ஆசிரியை, பாடசாலை அதிபர், ஏனைய      ஆசிரியர்கள் என் பெற்றோர்கள்   அனைவருக்கும் நான்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில்      க. பொ த. சாதாரண தரம் ,  க. பொ த. உயர் தரம்  மற்றும் ஏனைய பரீட்சைகளில் சிறந்த சித்திகளைப் பெற்று நான் உயர்ந்த இடத்தை  அடைவதே என்னுடைய சிறந்த இலட்சியமாகும்  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.