கருணாவின் கூற்றை கண்டிக்கிறோம். அவரோடு எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை – பொது ஜன பெரமுண

விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் தங்களது கட்சியின் உறுப்பினரோ அல்லது கட்சியோடு சம்பந்தப்பட்டவரோ அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் செயலாளர் சாகர கரியவசம் தெரிவித்துள்ளார். அவர் தமிழ் மகா சபை எனும் கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவுக்கு எதிராக போட்டியிடுவதாக செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சாகர கரியவாசம், அவருக்கோ அல்லது அவரது அறிக்கைகளுக்கோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண பொறுப்பல்ல என்றும் , கருணா அம்மான் கூறிய அறிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கடுமையாக கண்டிக்கிறது எனவும் தெரிவித்தார்.

கருணா அம்மானுக்கு தேசிய பட்டியல் எம்.பி இடம் வழங்குவது குறித்து எந்த விவாதமும் கட்சிக்கள் நடைபெறவில்லை என்றும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியிருந்தால் அதில் எந்த உண்மையும் இல்லை என்று காரியவசம் மேலும் தெரிவித்தார்.

திரு. கருணா அம்மான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவுக்கு தேசிய பட்டியலிலிருந்து இணைத்துக் கொள்ள மகிந்த ராஜபக்ச அவர்கள் விருப்பம் தெரிவித்த போதும் தாம் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் வர ஆசைப்படுகிறேன் என சொன்னதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.