கொரோனா காலமாக இருந்தாலும் அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றுக் காலம் நமக்கு ஒரு இக்கெட்டான காலமாக இருந்தாலும் அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இக்காலத்தில் நாங்கள் வீட்டில் தனிமைப்பட்டு ஓய்வுடன் இருக்கின்றோம். இதற்காக நாங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மாற்று வழிமுறைகளைக்  கையாண்டு வீட்டில் இருந்தவாறு அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும்   என்று சாபிர் மன்சூர் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் சாபிர் மன்சூர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இக்கால கட்டத்தை நாங்கள் பாதகமாகச் சிந்தித்து செயற்பட முனைந்தால்  நாம் முன்னோக்கி செல்ல முடியாது. எம்மால்  அடுத்த காலடியை தைரியமாக எடுத்து வைக்க முடியாதளவுக்கு  ஒரு துரதிஸ்டான நிலை ஏற்படும். எனவே  இதனால் நாம் எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்பட்டவராகிவிடுவோம்.

எந்த எதிர்மறையான அம்சமாக இருந்தாலும்  சரி நேர்மறையாகச் சிந்தித்து செயற்பட்டால்  இந்த இக்கெட்டான காலத்தில் கூட நாங்கள் தலைநிமிர்ந்து நிற்க இயலுமாகும் என்பதில் சந்தேகமில்லை.
இக்கால கட்டத்தில் புதிய விசயங்களைச் சிந்திக்க  வேண்டும்.  அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.  இந்நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பெரு எண்ணிக்கையிலானவர்கள் வேலையிழந்து நிர்க்கதியான நிலையில் இருக்கின்றனர்.

இந்த இக்கெட்டான கால கட்டத்தில் காலத்தை வீண்விரயம் செய்யாமல் பொருளாதார வளத்தை பெருக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. தமக்கென இணைய தளத்தை வடிவமமைத்து தம்முடைய முகவரியை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் எமது நாட்டில் உற்பத்தியாகும்  உணவுகள் மற்றும் சுற்றுலா வலயத்திலுள்ள வளங்கள் எல்லாம் இணையளத்தளத்தில் பதிவேற்றம் செய்து அவை பற்றி ஒன் லைன் ஊடாக பிரச்சார வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.  அப்பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை வெளிநாட்டவர்களிடமிருந்து இலகுவில் பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுது இவ்வாறான வியாபார நடைமுறைகளை பலர் செய்து வருகின்றார்கள்.

தற்போது 200 மீட்டர் தூர இடைவெளியில் பிரதான வீதியோரங்கள் எங்கும் மரக்கறி கடைகள் வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   நன்கு வசதி படைத்தவர்கள் கூட தங்களுடைய கௌரவத்தைப் பார்க்காமல் தற்போது பிரதான நகரங்களுக்கும்  புற நகரங்களுக்கும் கிராமங்களுக்கும்  சொகுசுக் கார்களில் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காணக் கூடியதாக உள்ளன.   இப்படி புதிய முயற்சிகள் கொரோனா தொற்றுக் காலத்தில் மேற்கொண்டு வருவதை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக நுகர்வோர்களுக்கு அத்தியவசியமான உணவுப் பொருட்களை கருத்திற் கொண்டு செயற்படுதல் தொடர்பில் நாம் கூடுதல் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இன்று வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு இடமும் நிலமும் தேவை எனச்  சொல்லுமளவுக்கு இல்லை.  இன்று எல்லோரும் இருக்கும் இடத்திலேயே நாம் கழிவுகளாக  வீசும்  சிறு சிறு பிளாஸ்டிப் வெறும் வெற்றுப்  போத்தல்களில் கூட  பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தி பயிர்ச் செய்கைகளில்  ஈடுபட்டு வருகின்றார்கள். இன்று பயிர்ச் செய்கைக்கு நிலம் தேவை என்ற சொல்லுக்கு இடமில்லை.
உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.  எனவே இந்தச் சூழலில் அந்நாட்டவர்களும் தற்போது எந்தவித தொழிலும் இல்லாமல்தான் இருப்பார்கள். அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது சிறிய உற்பத்திகளை அறிமுகம் செய்து அதனை அவர்களுக்கு ஏற்றுமதி செய்து  வருமானம் ஈட்ட முடியும்.

கொரோனா தொற்றுக்குப் பின்னர் மிக நெருக்கமாக வாழும் வீட்டுச் சூழலில்  கூட  வீட்டுத் தோட்ட மாதிரிக் கிராமம் ஒன்றை அமைத்து பாரியளவில் மரக்கறி உற்பத்திகள் செய்து வருகின்றார்கள். இன்று அவர்களுடைய இந்த உற்பத்தியின் மூலம் அன்றாடம் தம் வீட்டுக்குத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். எனவே இக்கெட்டான காலமாக இருந்தாலும் கொரோனா தொற்றுக் காலத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.