கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் குடும்பஸ்தர் மரணம்!

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பியகமை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் அதிவேகமாகப் பயணித்தமையினாலேயே கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த மதிலுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மோதிய வேகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.