டிப்பர் மோதி தாய் மரணம்! – இரு மகன்கள் படுகாயம்.

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பஸ்ஸுக்காகக் காத்திருந்த 46 வயதுடைய பெண் ஒருவர் மீது சிறிய ரக டிப்பர் வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது இரு மகன்களும் படுகாயமடைந்துள்ளனர்.

மகனுக்குப் பரிகார பூஜை நடத்துவதற்குத் தேவையான துணிமணிகள் மற்றும் ஏனைய பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக நகரத்துக்குச் செல்வதற்காக வீதியோரமாக நின்றிருந்தபோதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தம்புள்ளை, கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு மகன்களும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துவிட்டு, கடந்த 8ஆம் திகதிதான் நாடு திரும்பியிருந்தார் என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மூத்த மகனுக்கான நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக பஸ்ஸுக்காகக் காத்திருந்த வேளையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புள்ளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.