மோ. சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம் – சிலாபத்தில் துயரம்.

சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

சிலாபம் – ஆனமடுவை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை சம்பவ இடத்தில் நின்றவர்கள் உடனடியாக மீட்டு சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்தார் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பள்ளம, பொத்துக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மொஹொட்டி பத்திரன்னஹேலாகே கயான் புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.