பசுவின் கோமியம் லிட்டர் 10ரூபாய்: உத்தரப்பிரதேச அரசு புதிய திட்டம் தொடக்கம்!

ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

15 கிராமங்களில் சோதனை முறை

இந்நிலையில் அங்கு, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் இருந்து ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாக, 15 கிராமங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், நாளாந்தம் சுமார் 500 லீற்றர் கோமியம் சேகரிக்கப்படுகிறது. இந்த கோமியத்தை பயன்படுத்தி, இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாய உரங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றி பெற்றால், மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என உபி அரசு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.