கர்ப்பிணிப் பெண் குத்திப் படுகொலை! – கணவர் கத்தியுடன் மடக்கிப் பிடிப்பு.
கற்பிட்டியின் பாலக்குடவா பகுதியில் 26 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்தப் பெண், கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி, பாலக்குடவா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திலினி தில்ருக்ஷி என்ற கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக, உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய பெண்ணின் கணவர் தப்பியோடிய நிலையில் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
படுகொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் அவரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
