கனரக லொறி மோதி சைக்கிள் ஓட்டுநர் பலி!

கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

கொழும்பு – குருநாகல் வீதியில் ஏகல மற்றும் ஜா-எல ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் லொறிக்கு அடியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.