ஹெட்போனில் பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்தவர் மீது ரயில் மோதியதில் ஒரு கையும், இரண்டு கால்களும் துண்டிப்பு! – யாழ்ப்பாணத்தில் துயரம்.
யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு கால்களையும், ஒரு கையையும் இழந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இணுவில் – காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபர், தனது வீட்டுக்கு முன்பாக உள்ள ரயில் பாதையில் ‘ஹெட்போன்’ அணிந்து கொண்டு பாடல் கேட்டுக்கொண்டே படுத்திருந்த வேளையே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது மேற்படி நபரின் மீது ரயில் மோதியதில், அவரது இரண்டு கால்களும் ஒரு கையும் துண்டிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட அவர், யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
