அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட இறுதியாட்டம்.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி – 2026 இன் இறுதியாட்டம் இன்று (11.10.2026) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் இளவாலை வாலிபத்திடலில் நடைபெறவுள்ளது.
இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து புத்தூர் வளர்மதி அணி மோதவுள்ளது.
15 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
