சென்னை : நிவர் புயலின் தாக்கம் குறைந்தாலும் தரைப்பகுதியில் தாக்கம் நீடிக்கும்

நிவர் புயலின் தாக்கம் குறைந்தாலும் தரைப்பகுதியில் தாக்கம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், நிவர் புயல் தாக்கம் குறைந்தாலும் தரைப்பகுதியில் தாக்கம் நீடிக்கும் என அறிவித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
காற்றும் 65 கிமீ – 75 கிமீ வேகத்திலும், சில நேரங்களில் 85 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தகவல் வெளியாகும்.

Leave A Reply

Your email address will not be published.