அரச உத்தியோகத்தர்கள் வீடுகளில் இருந்து கடமையாற்றுமாறு பணிப்பு.

அக்கரைப்பற்று பகுதியில் கொரோனா தொற்றாளர்கள், அடையாளம் காணப்பட்டதையடுத்து, கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய பகுதிகிளிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரச கடமைக்கு வரும் உத்தியோகஸ்த்தர்களை கடமைக்கு வராமல் அவர்களது, வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு அறிக்கப்பட்டுள்ளது. என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கச்சேரியில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற கொவிட் செயலணிக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

காத்தான்குடியிலும் புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மாவட்ட கொரோனா செயலணியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக கிராமமட்டத்திலே உள்ள 5 பேர் கொண்ட கொரோனா செயலணிக்கு, பிரதேச மட்டத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதேச செயலாளரின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொது சுகாதார வைத்தியர், ஆகிய குழுவினால் அவர்களுக்கான பயிற்சியை மீண்டும் ஒருதடவை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது உடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரத்திற்குப்ட்ட பகுதியில் சில இரகசியமான முறையில் தனியார் வகுப்புக்கள் நடைபெறுவதாகவும் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இதனால் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அது கண்டறியப்பட்டால் உரிய சுகாதார முறைப்படி நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரத் திணைக்களத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க கொவிட் – 19 காரணமாக வாழைச்சேனைப் பகுதி முற்றாக மூடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் தொழில்வாய்ப்பை இழந்தமக்களுக்கும், வாழ்வாதாரங்களை இழங்த மக்களுக்கும் அரசாங்கம் 158 மில்லியனை ஒதுக்கீடு செய்து அதற்காக செலவிடப்பட்டுள்ளது. என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

சதாசிவம் நிரோஜன்

Leave A Reply

Your email address will not be published.