கண்டி அக்குரணை பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

அக்குரணையில் அத்துமீறும் கொரொனா! கண்டி அக்குரணை பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.

மேலும், கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலேயே பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட புளுகஹதென்ன மற்றும் தெலம்புகஹவத்த ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.