வடக்கில் மாணவர் வரவு வழமைக்கு வரவில்லை!

வடக்கில் மாணவர் வரவு வழமைக்கு வரவில்லை!

கொரோனா வைரஸ் அச்சத்தின் பின்பு பாடசாலைகள் மீள ஆரம்பித்து ஒரு வாரம் கடந்துவிட்டபோதிலும் மாணவர்களின் வரவு வீதம் 60 தாண்டவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கொரோனாத் தாக்கத்தின் பின்பு கடந்த மாதம் 23ஆம் திகதி அன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் மாணவர்களின் வரவு நேற்று வரை மிகவும் மந்தமாகவே உள்ளது. இதனடிப்படையில் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த 23ஆம் திகதி 49 வீத மாணவர் வரவு காணப்பட்டது. நேற்று 60 வீதமாகக் காணப்பட்டது.

இதன் காரணமாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் சீராக முன்கொண்டு செல்லப்படுவதில் தொடர்ந்தும் இடையூறாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் வடக்கு மாகாணத்தில் மாணவர் வரவை அதிகரிக்கக் கல்வி அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.