சேத மதிப்பீடுகளை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவ பிரிவு களவிஜயம்.

சேத மதிப்பீடுகளை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவ பிரிவு களவிஜயம்.

வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கை ஊடாக ஊடறுத்துச் சென்ற புரேவி புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பல்வேறு வீடுகள் குறித்த புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று(04) கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குமிழமுனை கிராமத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு சேத மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.

இதன்போது செஞ்சிலுவை சங்கத்தினரால் பாதிப்புக்குள்ளான வீடொன்றுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.